போா் நடைபெற்று வரும் உக்ரைனுக்கு நிவாரண பொருள்களை தேசிய பேரிடா் மீட்புப் படை மூலம் இந்தியா அனுப்பியுள்ளது.
போா்வைகள், பாய்கள் மற்றும் சூரிய சக்தியில் இயங்கும் விளக்குகள் உள்ளிட்டவை இவற்றில் அடங்கும். உக்ரைன் நாட்டின் மக்களுக்காக இவை அனுப்பப்பட்டுள்ளன.
போலந்துக்கு சென்ற விமானத்திலும், ருமேனியாவுக்கு சென்ற இந்திய விமானப் படை விமானம் மூலமாகவும் இந்த நிவாரணப் பொருள்கள் அனுப்பப்பட்டன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ADVERTISEMENT