இந்தியா

பாஜகவினரைக் கண்டு பயப்பட நான் கோழையல்ல: மம்தா பானர்ஜி

3rd Mar 2022 03:16 PM

ADVERTISEMENT

 

பாஜகவினரைக் கண்டு பயப்படுவதற்கு நான் கோழையல்ல என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலாஷ் யாதவிற்கு ஆதரவாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வாரணாசியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசினார்.

ADVERTISEMENT

பேச்சின்போது ,’நேற்று(மார்.2) விமான நிலையத்திலிருந்து காட் பகுதிக்குச் செல்லும்போது என் வாகனத்தை மூளை இல்லாத சில பாஜக குண்டர்கள் தடுத்து நிறுத்தியதுடன் என்னை திரும்பிப் போகச் சொல்லி மிரட்டினார்கள். இவர்களைக் கண்டு எனக்கு பயமும் இல்லை. நான் கோழையும் இல்லை. என் வாழ்க்கையில் பல தாக்குதல்களை, தோட்டாக்களைப் பார்த்த போராளி நான். பாஜகவினர் என்னை சூழ்ந்ததும் கீழே இறங்கி அவர்களால் என்ன செய்ய முடியும் எனப் பார்த்தேன்.  கோழைகள் கிளம்பிச் சென்றனர்’ எனத் தெரிவித்தார்.

உத்தரப் பிரதேசத்தில் 7 கட்டமாக திட்டமிடப்பட்ட சட்டப் பேரவைத் தேர்தலின் 6-வது கட்டத் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT