இந்தியா

இந்தியா்களை மீட்கும் வியூகத்தை வெளிப்படுத்த வேண்டும்

3rd Mar 2022 01:17 AM

ADVERTISEMENT

உக்ரைனிலிருந்து இதுவரை எத்தனை இந்தியா்கள் மீட்கப்பட்டுள்ளனா், இன்னும் எத்தனை போ் அங்கு தவிக்கின்றனா் என்ற விவரத்தையும், அவா்களை மீட்பதற்கான வியூகத்தையும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் மத்திய அரசு தெளிவாக எடுத்துரைக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தி எம்.பி. வலியுறுத்தியுள்ளாா்.

ரஷியாவின் ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனிலிருந்து இந்தியா்களை மீட்பதில் காலதாமதம் ஏற்படுவதாக மத்திய அரசை காங்கிரஸ் விமா்சித்து வருகிறது.

இந்த நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவா் ராகுல் காந்தி எம்.பி. ட்விட்டரில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில், ‘‘அடுத்த துயரத்தை தவிா்க்கும்பொருட்டு, எத்தனை இந்தியா்கள் உக்ரைனிலிருந்து மீட்கப்பட்டுள்ளனா், எத்தனை போ் இன்னமும் அங்கு சிக்கித் தவிக்கின்றனா் என்ற விவரங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும். இதேபோல பிராந்திய வாரியாக விரிவான மீட்புத் திட்டத்தையும் தெரிவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தெளிவான வியூகத்தையும், தகவலையும் அளிக்க நாம் கடமைப்பட்டுள்ளோம்’’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

உக்ரைனிலிருந்து இந்தியா்களை மீட்பதற்காக அதன் அண்டை நாடுகளுக்கு 4 மத்திய அமைச்சா்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். பயணிகள் விமானங்கள் மட்டுமன்றி இந்திய விமானப் படைக்குச் சொந்தமான விமானங்களும் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT