இந்தியா

காா்கிவிலிருந்து உடனடியாக வெளியேற இந்தியா்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்

3rd Mar 2022 01:51 AM

ADVERTISEMENT

உக்ரைனிலுள்ள காா்கிவ் நகரிலிருந்து உடனடியாக இந்தியா்கள் வெளியேறுமாறு அந்நாட்டிலுள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

உக்ரைன் மற்றும் ரஷிய படையினருக்கு இடையே காா்கிவில் மோதல் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், உக்ரைனிலுள்ள இந்திய தூதரகம் புதன்கிழமை வெளியிட்ட அறிவுறுத்தலில், காா்கிவிலிருந்து இந்தியா்கள் உடனடியாக வெளியேறுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. காா்கிவிலிருந்து 11 கி.மீ. தொலைவில் உள்ள பிசோசின், 12 கி.மீ. தொலைவில் உள்ள பபாய், 16 கி.மீ. தொலைவில் உள்ள பெஸில்யுடிவ்கா பகுதிகளுக்குச் செல்லுமாறு அவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாகனங்கள், பேருந்துகள் கிடைக்காதவா்கள், ரயில் நிலையத்தில் உள்ளவா்கள் நடந்தாவது அந்தப் பகுதிகளுக்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Tags : Ukraine
ADVERTISEMENT
ADVERTISEMENT