இந்தியா

நாட்டில் புதிதாக 6,561 பேருக்கு கரோனா

3rd Mar 2022 09:44 AM

ADVERTISEMENT

 

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 6,561 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேர கரோனா பாதிப்பு நிலவரம் குறித்த தரவுகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது. புதிதாக 6,561 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 142 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். 14,947 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 5,14,388 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 4,23,53,620 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

ADVERTISEMENT

இதையும் படிக்க | உக்ரைனில் இந்திய மாணவர்கள் பணயக் கைதிகளாக உள்ளார்களா? வெளியுறவுத்துறை விளக்கம்

இன்றைய நிலவரப்படி 77,152 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டில் இதுவரை 174.24 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT