இந்தியா

உக்ரைனிலிருந்து தாயகம் திரும்பிய 207 ராஜஸ்தான் மாணவர்கள்

3rd Mar 2022 02:56 PM

ADVERTISEMENT

 

உக்ரைனிலிருந்து, புலம்பெயர்ந்தோர் மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்த 207 மாணவர்கள் பத்திரமாகத் தாயகம் திரும்பியுள்ளனர் என்று தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் சகுந்தலா ராவத் தெரிவித்தார். 

இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது, 

உக்ரைனில் சிக்கியுள்ள மீதமுள்ள மாணவர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோரைத் திரும்ப அழைத்துவர அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார். 

ADVERTISEMENT

பிப்ரவரி 24 அன்று உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலான தீவிரமான சூழ்நிலை எழுந்துள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட நாட்டிலிருந்து அவர்களை மீட்டெடுப்பது மிகவும் முக்கியம். 

ராஜஸ்தானின் சுமார் 1,008 குடிமக்கள் மற்றும் மாணவர்கள் உக்ரைனில் உள்ள கார்கிவ், கீவ் மற்றும் பிற இடங்களில் சிக்கித் தவித்தனர், அவர்களில் 207 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் கூறினார்.

முதல்வர் அசோக் கெலாட்டின் உத்தரவின் பேரில், சிக்கித் தவிக்கும் மக்களைப் பாதுகாப்பாகத் திரும்புவதற்கான நோடல் அதிகாரியாக ராஜஸ்தான் அறக்கட்டளையின் ஆணையர் தீரஜ் ஸ்ரீவஸ்தவா நியமிக்கப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாணவர்கள் விமான நிலையத்தில் வரவேற்கப்பட்டு ஜெய்ப்பூர், புது தில்லி மற்றும் மும்பையில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களை அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்ப வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இது தவிர, மார்ச் 1ம் தேதி, உக்ரைனிலிருந்து போலந்து வந்த அம்மாநில மக்களிடம் முதல்வர் நேரில் பேசி, நிலைமையைக் கேட்டறிந்தார். மக்கள் பாதுகாப்பாகத் திரும்புவதற்கு அனைத்து முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT