இந்தியா

தில்லியில் கனமழை: கடும் போக்குவரத்து நெரிசல்

30th Jun 2022 01:38 PM

ADVERTISEMENT

 

தில்லியில் பருவமழை பெய்யத் தொடங்கியுள்ளதால், இன்று காலை முதல் கனமழை பெய்து வருகின்றது. இதனால்  நகரின் பல பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

ஐஎம்டி அறிக்கையின்படி, தில்லி முழுவதும் அதை ஒட்டிய பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

பயணிகள் அதற்கேற்ப தங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு போக்குவரத்து காவல்துறை டிவிட்டர் மூலம் அறிவுறுத்தியுள்ளார். 

ADVERTISEMENT

தில்லியின் பல பகுதிகளான ஐடிஓ, பாரபுல்லா, ரிங் ரோடு மற்றும் குறிப்பாக தில்லி-நொய்டா எல்லை, சில்லா பார்டர், யுபி கேட், தில்லி-குருகிராம் சாலையில் மழை பெய்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பிரகதி மைதானம், வினோத் நகர் அருகே தில்லி-மீரட் விரைவுச்சாலை, புல் பிரஹலாத்பூர் சுரங்கப்பாதை, ஜாகிரா மேம்பாலம், ஜஹாங்கிர்புரி மெட்ரோ ரயில் நிலையம், லோனி சாலை ரவுண்டானா மற்றும் ஆசாத்பூர் மார்க்கெட் ஆகிய இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT