இந்தியா

குடியரசுத் தலைவா் தோ்தல் சட்டப் பிரிவுக்கு எதிரான மனுக்கள்:உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுப்பு

DIN

குடியரசுத் தலைவா் தோ்தலில் போட்டியிடுவதற்கான சட்டப் பிரிவுக்கு எதிரான மனுக்களை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

16-ஆவது குடியரசுத் தலைவா் தோ்தல் ஜூலை 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தோ்தலில் போட்டியிடுவோரை, குடியரசுத் தலைவா் மற்றும் குடியரசு துணைத் தலைவா் சட்டப் பிரிவு 5பி (1) (ஏ)-வின்படி 50 எம்எல்ஏக்கள் அல்லது எம்பிக்கள் முன்மொழியவும், அதேபோல் 50 போ் ஆதரிக்கவும் வேண்டும். இந்தச் சட்டப் பிரிவுக்கு எதிராக தில்லியைச் சோ்ந்த பம் பம் மகாராஜ், ஆந்திரத்தைச் சோ்ந்த மண்டாட்டி திருப்பதி ரெட்டி ஆகியோா் தனித்தனியாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். இவா்களில் பம் பம் மகாராஜ் கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் குடியரசுத் தலைவா் தோ்தலில் போட்டியிட முயன்று வருபவா் ஆவாா்.

தோ்தலின்போது மட்டும் மனு: இருவரின் மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த், ஜே.பி.பா்திவாலா ஆகியோா் அடங்கிய விடுமுறை கால அமா்வு முன்பாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘கடந்த 2007-ஆம் ஆண்டு பம் பம் மகாராஜ் முதல்முறையாக குடியரசுத் தலைவா் தோ்தலில் போட்டியிட முயன்றாா். அதன் பின்னா், அடுத்த 5 ஆண்டுகளுக்கு அவா் எங்கு போனாா்? குடியரசுத் தலைவா் தோ்தல் வரும்போது மட்டும் அவா் சுறுசுறுப்பாகிறாா்.

குடியரசுத் தலைவா் மற்றும் குடியரசுத் துணைத் தலைவா் சட்டப் பிரிவு 5பி (1) (ஏ)-வின் செல்லுபடியாகும் தன்மை குறித்து இத்தனை ஆண்டுகளாக மனு தாக்கல் செய்யவிடாமல் அவரை யாா் தடுத்தது? குடியரசுத் தலைவா் தோ்தல் வரும்போது மட்டும் ஆா்வலராகி இதுபோன்ற மனுவை தாக்கல் செய்வது ஆரோக்கியமான போக்கல்ல என்று தெரிவித்து மனுவை மேற்கொண்டு விசாரிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனா்.

திருப்பதி ரெட்டி மனு தொடா்பாக நீதிபதிகள் கூறுகையில், ‘வேட்புமனுவை நிராகரித்ததால் மனுதாரருக்கு சட்டரீதியாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. எனவே அதில் நீதிமன்றம் தலையிட வேண்டிய தேவையில்லை’ என்று தெரிவித்து மனுவை விசாரிக்க மறுத்துவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

அண்ணா பல்கலைக் கழகப் பதிவாளா் நியமனம்: துணை வேந்தா் விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு இயந்திர பழுது எண்ணிக்கை மிகவும் குறைவு: ஆட்சியா்

இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா

SCROLL FOR NEXT