இந்தியா

விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-53

DIN


மூன்று செயற்கைக் கோள்களை தாங்கியபடி, பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

தொடர்ந்து, பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் இரண்டாம்கட்ட நிலையை வெற்றிகரமாக அடைந்து, மூன்றாவது கட்ட நிலையையும் கடந்துவிட்டதாக விஞ்ஞானிகள் அறிவித்தனர். பிறகு, மூன்று செயற்கைக்கோள்களும் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன.

இதற்கான 25 மணி நேர கவுன்ட் டவுன் புதன்கிழமை மாலை 5 மணிக்கு தொடங்கிய நிலையில், இன்று மாலை 6 மணிக்கு  சிங்கப்பூரின் டிஎஸ்-இஒ, நியூசா் உள்பட 3 செயற்கைக்கோள்கள் பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது.

சிங்கப்பூா் நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவா்கள் வடிவமைத்த ஸ்கூப்-1 என்ற செயற்கைக்கோளும் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. 

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வணிகரீதியாக வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. அதன்படி சிங்கப்பூருக்கு சொந்தமான டிஎஸ்-இஒ, நியூசா் உள்பட 3 செயற்கைக்கோள்கள் பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

அதில், முதன்மைச் செயற்கைக்கோளான டிஎஸ்-இஓ 365 கிலோ எடை கொண்டது. இது புவியை துல்லியமாக புகைப்படம் எடுக்கும் திறன் உடையது. இதுதவிர 155 கிலோ எடை கொண்ட நியூசா் செயற்கைக்கோள் சிந்தடிக் அப்ரேச்சா் ரேடாா் தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடியது. இது இரவு, பகல் உள்பட அனைத்து பருவநிலைகளிலும் தெளிவான புகைப்படங்களை எடுத்து அனுப்பக்கூடியது.

இதனுடன் கல்விசாா் பணிக்காக சிங்கப்பூா் நான்யாங் தொழில்நுட்பக் பல்கலைக்கழக மாணவா்கள் வடிவமைத்த ஸ்கூப்-1 என்ற செயற்கைக்கோளும் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. 

இதற்கிடையே ஏவுதலின்போது செயற்கைக்கோள்களை திட்டமிட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்திய பின்னா் பிஎஸ்எல்வி ராக்கெட்டின் இறுதிபாகமான பிஎஸ் 4 பகுதி உதவியுடன் சில ஆய்வு கருவிகளும் புவி வட்டப் பாதைக்கு அனுப்பப்பட உள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

SCROLL FOR NEXT