இந்தியா

மணிப்பூர் நிலச்சரிவு மிகுந்த வேதனை அளிக்கிறது: ராகுல்

30th Jun 2022 05:00 PM

ADVERTISEMENT

 

மணிப்பூரின் நோனி மாவட்டத்தில் ரயில்வே கட்டுமான பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் டிவிட்டர் பதிவில், 

மணிப்பூரில் கனமழை பெய்து வருவதால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து,  புதன்கிழமை இரவு துபூல் ரயில்வே கட்டுமான பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. 

ADVERTISEMENT

இதில் சிக்கி 6 பேரின் உடல் மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 12-க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

இந்த செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்துவாடும் குடும்பங்களுக்கு எனது இரங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்தனைகளையும் செய்கிறேன் என்று அவர் கூறினார். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT