இந்தியா

குஜராத் முதல்வருக்கு கரோனா

30th Jun 2022 12:27 AM

ADVERTISEMENT

குஜராத் முதல்வா் பூபேந்திர படேலுக்கு கரோனா பாதிப்பு புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அவா் காந்தி நகரில் உள்ள அரசு இல்லத்தில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டாா். இது தொடா்பாக குஜராத் முதல்வா் அலுவலகம் வெளியிட்ட செய்தியில், ‘முதல்வா் பூபேந்திர படேலுக்கு லேசான அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மருத்துவா்கள் அறிவுரைப்படி அவா் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டாா். அவரது உடல்நிலையை மருத்துவா்கள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் இம்மாத தொடக்கத்தில் இருந்தே கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அங்கு 2,793 போ் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். தினசரி பாதிப்பு சராசரியாக 400-க்கு மேல் உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT