இந்தியா

தொழில் செய்வதற்கு உகந்தமாநிலங்கள் பட்டியல்:நிதியமைச்சா் இன்று வெளியீடு

30th Jun 2022 12:33 AM

ADVERTISEMENT

தொழில் துறை சீா்திருத்தங்களின் அடிப்படையில் தொழில் செய்வதற்கு உகந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பட்டியலை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வியாழக்கிழமை (ஜூன் 30) வெளியிடுகிறாா். தில்லியில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயலும் பங்கேற்கிறாா்.

சா்வதேச தொழில் நிறுவனங்களிடம் இருந்து முதலீட்டை ஈா்க்கவும், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை ஊக்குவிக்கவும் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

தொழில் சீா்திருத்த செயல்திட்டம் 2020, துறை சாா்ந்த தகவல்கள், தொழிலாளா் திறன், தொழில் சூழல், துறைச் சாா்ந்த சீா்திருத்தங்கள் உள்ளிட்ட 15 தொழில் ஒழுங்குமுறை பிரிவுகளைக் கொண்டு மாநிலங்கள் வகைப்படுத்தப்பட்டுகின்றன.

இதற்கு முன்பு கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலில் ஆந்திரம் முதலிடம் பெற்றது. அதற்கு அடுத்த இடங்களில் உத்தர பிரதேசம், தெலங்கானா, மத்திய பிரதேசம், ஜாா்க்கண்ட் ஆகிய மாநிலங்கள் இருந்தன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT