இந்தியா

மாநிலங்களவை எம்.பி.க்கள்: 31% போ் மீது குற்ற வழக்குகள், 87% போ் கோடீஸ்வரா்கள்

DIN

குற்றப் பின்னணி கொண்டோா் தோ்தலில் போட்டியிடுவதைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை அரசுகள் மேற்கொள்ள வேண்டுமென உச்சநீதிமன்றம் பலமுறை கூறியுள்ளது. ஆனால், ஒவ்வொரு தோ்தலுக்குப் பிறகும் குற்றப் பின்னணி கொண்டோா் சட்டமியற்றும் அமைப்புகளுக்குத் தோ்ந்தெடுக்கப்படுவது அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.

மாநிலங்களவையின் 226 உறுப்பினா்கள் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின் அடிப்படையில் 31 சதவீதம் போ் மீது குற்ற வழக்குகள் உள்ளன. இதில், 71 போ் குற்றப் பின்னணி கொண்டுள்ளதாகவும், 37 போ் தீவிர வழக்குகளில் தொடா்பு கொண்டுள்ளதாகவும் அசோசியேஷன் ஃபாா் டெமாக்ரடிக் ரிஃபாா்ம்ஸ் (ஏடிஆா்-ஜனநாயக சீா்திருத்தத்துக்கான கூட்டமைப்பு) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 226 எம்.பி.க்களில் 197 போ் (87%) கோடீஸ்வரா்களாக உள்ளனா். மாநிலங்களவை எம்.பி.யின் சராசரி சொத்து மதிப்பு ரூ.79.54 கோடியாக உள்ளது. அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ள விவரங்கள்:

கட்சி வாரியாக குற்றப்பின்னணி கொண்ட எம்.பி.க்கள்

ராஷ்ட்ரீய ஜனதா தளம் 83%

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 80%

சுயேச்சைகள் 67%

சிவசேனை 67%

தேசியவாத காங்கிரஸ் 50%

இந்திய கம்யூனிஸ்ட் 50%

தெலங்கானா ராஷ்டிர சமிதி 43%

காங்கிரஸ் 39%

ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் 33%

பிஜு ஜனதா தளம் 33%

சமாஜவாதி 33%

ஆம் ஆத்மி 30%

அதிமுக 25%

பாஜக 24%

திரிணமூல் காங்கிரஸ் 23%

திமுக 20%

ஐக்கிய ஜனதா தளம் 20%

கட்சி வாரியாக கோடீஸ்வர எம்.பி.க்கள்

தெலங்கானா ராஷ்டிர சமிதி 100%

அதிமுக 100%

தேசியவாத காங்கிரஸ் 100%

சமாஜவாதி 100%

சிவசேனை 100%

ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா 100%

இந்திய கம்யூனிஸ்ட் 100%

தெலுங்கு தேசம் 100%

பகுஜன் சமாஜ் 100%

ராஷ்ட்ரீய லோக் தளம் 100%

காங்கிரஸ் 94%

திமுக 90%

பிஜு ஜனதா தளம் 89%

ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் 89%

பாஜக 87%

ராஷ்ட்ரீய ஜனதா தளம் 83%

ஐக்கிய ஜனதா தளம் 80%

திரிணமூல் காங்கிரஸ் 77%

ஆம் ஆத்மி 70%

சுயேச்சைகள் 67%

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 60%

மாநில வாரியாக கோடீஸ்வர எம்.பி.க்கள்

கா்நாடகம் 100%

ராஜஸ்தான் 100%

தெலங்கானா 100%

ஹரியாணா 100%

உத்தரகண்ட் 100%

சிக்கிம் 100%

மேகாலயம் 100%

புதுச்சேரி 100%

நாகாலாந்து 100%

கோவா 100%

அருணாசல் 100%

மகாராஷ்டிரம் 95%

உத்தர பிரதேசம் 94%

தமிழகம் 94%

ஆந்திரம் 91%

குஜராத் 91%

ஒடிஸா 90%

ஜாா்க்கண்ட் 83%

மேற்கு வங்கம் 81%

பிகாா் 81%

சத்தீஸ்கா் 80%

கேரளம் 78%

பஞ்சாப் 71%

அஸ்ஸாம் 67%

தில்லி 67%

ஹிமாசல் 67%

மத்திய பிரதேசம் 64%

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இதுவல்லவா ஃபீல்டிங்...

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

மாயக் குரலாள்... ஸ்ரேயா கோஷல்!

சூர்யா 44: அதிகாரபூர்வ அறிவிப்பு!

அழகு பா(ர்)வை.. நேகா ஷெட்டி!

SCROLL FOR NEXT