இந்தியா

பெரும்பான்மை கிடைக்குமா? உத்தவ் தாக்கரே தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்

29th Jun 2022 03:17 PM

ADVERTISEMENT

 

மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் இன்று(புதன்கிழமை) மாலை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் நிலவும் அரசியல் குழப்பம் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. ஆளும் சிவசேனை கட்சியின் தலைமைக்கு எதிராக அக்கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டேவின் தலைமையில் 50 சட்டப்பேரவை உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். 

இதையும் படிக்க | மகாராஷ்டிரத்தில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு

ADVERTISEMENT

இதனால், நாளை (ஜூன் 30) நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்க மாநில அரசுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவிற்கு எதிராக சிவசேனை கட்சியின் தலைமை கொறடா சுனில் பிரபு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். ஆளுநரின் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிரான சிவசேனையின் இந்த மனு மீது உச்சநீதிமன்றம் இன்று மாலை விசாரணை மேற்கொள்ள உள்ளது.

இந்நிலையில், இன்று(புதன்கிழமை) மாலை 5 மணிக்கு முதல்வர்  உத்தவ் தாக்கரே தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளதால் அம்மாநில அரசியலில் பரபரப்பு கிளம்பியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT