இந்தியா

நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் வெற்றி பெறுவோம்: அதிருப்தி எம்எல்ஏக்கள்

29th Jun 2022 11:37 AM

ADVERTISEMENT

மகாராஷ்டிரத்தில் நாளை நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் தாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம் என அதிருப்தி எம்எல்ஏக்கள் தெரிவித்துள்ளனர். 

மகாராஷ்டிரத்தில் மகா விகாஸ் கூட்டணி ஆட்சிக்கு எதிராக சிவசேனை அமைச்சா் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 37 எம்எல்ஏக்கள் அணி திரண்டுள்ளனா். மேலும் 9 சுயேச்சை எம்எல்ஏக்களும் அவா்களுக்கு ஆதரவாக உள்ளனா்.

ஷிண்டே உள்ளிட்ட 16 எம்எல்ஏக்களுக்கு மகாராஷ்டிர பேரவை துணைத் தலைவா் தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதற்கு எதிராக ஏக்நாத் ஷிண்டே தாக்கல் செய்துள்ள மனு உச்சநீதிமன்றத்தில் இருந்து வருகிறது. 

இந்நிலையில், நாளை (ஜூன் 30) மாலை 5 மணிக்குள் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு ஆளுநர் பகத் சிங் கோஷியாரி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து நாளை சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. 

ADVERTISEMENT

ஆளுநர் பகத்சிங் கோஷியாரியை முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவில் சந்தித்த நிலையில் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். 

இந்நிலையில், நாளை நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என்று அதிருப்தி எம்எல்ஏ குலாப்ராவ் பட்டீல் தெரிவித்துள்ளார். 

குவாஹாட்டி ஹோட்டலில் மற்ற அதிருப்தி எம்எல்ஏக்களிடையே பேசிய அவர், 'மக்கள் நம் பக்கம் இருப்பதாலும் நம்மிடம் பெரும்பான்மை இருப்பதாலும் இந்த வாக்கெடுப்பில் கண்டிப்பாக வெற்றி பெறுவோம், யாரும் அதைப்பற்றி கவலைப் படத் தேவையில்லை' என்று கூறியுள்ளார். 

இதையும் படிக்க | நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்புவாரா உத்தவ்தாக்கரே? உச்சநீதிமன்றத்தில் சிவசேனை மனு  

ADVERTISEMENT
ADVERTISEMENT