இந்தியா

வருண் காந்திக்கு சொந்தக் கருத்தைக் கூறுவது பிடிக்கும்

DIN

பாஜக எம்.பி. வருண் காந்திக்கு நாள்தோறும் சொந்தக் கருத்துகளை வெளியிட்டுக் கொண்டிருப்பது மிகவும் பிடித்தமானது என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.
 பல்வேறு விவகாரங்களில் பிலிபிட் தொகுதி எம்.பி.யான வருண் காந்தி தனது சொந்தக் கருத்துகளைக் கூறி வருகிறார். அவரது கருத்துகள் பொதுவாக பாஜகவின் அதிகாரபூர்வ நிலைப்பாட்டுக்கு எதிரானதாக இருந்து வருகின்றன. அவர் கடந்த வாரம் கூறுகையில் "அக்னிபத் ராணுவ ஆள்தேர்வுத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படுவோருக்கு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வூதியம் கிடையாது என்னும்போது மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளுக்கு மட்டும் ஓய்வூதியப் பயன்கள் அளிக்கப்படுவது ஏன்?' என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
 இந்நிலையில் அக்னிபத் திட்டம் தொடர்பாக வருண் காந்தி கூறியுள்ள கருத்து பற்றி மத்திய பிரதேச மாநிலம், குவாலியர் வந்துள்ள பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான நரேந்திர சிங் தோமரிடம் செய்தியாளர்கள் செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளித்துக் கூறியதாவது: இது வருண் காந்தியின் சொந்தக் கருத்தாக இருக்கலாம். வருண் காந்திக்கு நாள்தோறும் சொந்தக் கருத்துகளை வெளியிடுவது மிகவும் பிடித்தமானது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல் பந்தில் சிக்ஸர் விளாசியது குறித்து மனம் திறந்த சமீர் ரிஸ்வி (விடியோ)

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

SCROLL FOR NEXT