இந்தியா

மும்பை சர்வதேச விமான நிலையத்தின் பெயர் மாற்றம்

29th Jun 2022 06:48 PM

ADVERTISEMENT

 

நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தின் பெயரை மாற்ற மகாராஷ்டிர அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

மகாராஷ்டிர மாநில அரசியலில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

இதையும் படிக்க: ’நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்வோம்’: ஏக்நாத் ஷிண்டே

ADVERTISEMENT

இந்நிலையில், அவுரங்காபாத்தை சம்பாஜி நகர் என்றும், ஒஸ்மானாபாத்தை தாராஷிவ் என்றும்  நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தின் பெயர் டிபி.பட்டீல் சர்வதேச விமான நிலையம் என்றும் பெயர் மாற்றம் செய்ய மகாராஷ்டிரா மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

மேலும், சிவசேனையின் அதிருப்தித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே நாளை(ஜூன் 30) நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் தன் ஆதரவாளர்களுடன் கலந்து கொள்வதாக அறிவித்துள்ளதால் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT