இந்தியா

உத்தவ் தாக்கரே ராஜிநாமா

29th Jun 2022 10:07 PM

ADVERTISEMENT


மகாராஷ்டிர மாநில முதல்வர் பதவியை ராஜிநாமா செய்வதாக உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். 

நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தத் தடையில்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து தாக்கரே இந்த முடிவை எடுத்துள்ளார். மேலும், 
சட்டப்பேரவை மேலவை உறுப்பினர் பதவியையும் ராஜிநாமா செய்வதாக தெரிவித்துள்ளார்.

படிக்கமகாராஷ்டிரத்தில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு: நீதிமன்றம் அனுமதி

சமூகவலைதளம் மூலம் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் பேசிய உத்தவ் தாக்கரே, உடன் நின்ற தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கும், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கும் நன்றி தெரிவித்தார். கடினமான சூழலில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தொண்டர்களும் உடன் நின்றதைக் குறிப்பிட்டார்.

ADVERTISEMENT

விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர், அடுத்து அமையவுள்ள அரசுக்கு முழு ஒத்துழைப்பு தரத் தயாராகவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.   

அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சூரத் செல்வதைத் தவிர்த்து என்னுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கலாம் என்றும், நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிப்பதாகவும் தெரிவித்தார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT