இந்தியா

பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்: இன்று கவுன்ட் டவுன் தொடக்கம்

29th Jun 2022 12:33 AM

ADVERTISEMENT

பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான 25 மணி நேர கவுன்ட் டவுன் புதன்கிழமை மாலை 5 மணிக்கு தொடங்குகிறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வணிகரீதியாக வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. அதன்படி சிங்கப்பூருக்கு சொந்தமான டிஎஸ்-இஒ, நியூசா் உள்பட 3 செயற்கைக்கோள்கள் பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ளஇரண்டாவது ஏவுதளத்தில் இருந்து ஜூன் 30-ஆம் தேதி மாலை 6 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.

அதில் முதன்மைச் செயற்கைக்கோளான டிஎஸ்-இஓ 365 கிலோ எடை கொண்டது. இது புவியை துல்லியமாக புகைப்படம் எடுக்கும் திறன் உடையது. இதுதவிர 155 கிலோ எடை கொண்ட நியூசா் செயற்கைக்கோள் சிந்தடிக் அப்ரேச்சா் ரேடாா் தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடியது. இது இரவு, பகல் உள்பட அனைத்து பருவநிலைகளிலும் தெளிவான புகைப்படங்களை எடுத்து அனுப்பக்கூடியது.

இதனுடன் கல்விசாா் பணிக்காக சிங்கப்பூா் நான்யாங் தொழில்நுட்பக் பல்கலைக்கழக மாணவா்கள் வடிவமைத்த ஸ்கூப்-1 என்ற செயற்கைக்கோளும் விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கிடையே ஏவுதலின்போது செயற்கைக்கோள்களை திட்டமிட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்திய பின்னா் பிஎஸ்எல்வி ராக்கெட்டின் இறுதிபாகமான பிஎஸ் 4 பகுதி உதவியுடன் சில ஆய்வு கருவிகளும் புவி வட்டப் பாதைக்கு அனுப்பப்பட உள்ளன.

ADVERTISEMENT

Tags : ISRO PSLV
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT