இந்தியா

கர்நாடகத்தில் 1000-ஐ நெருங்கும் கரோனா: புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு

29th Jun 2022 02:54 PM

ADVERTISEMENT

 

கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும 938 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ள நிலையில், அம்மாநில அரசு புதன்கிழமை புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. 

மாநில சுகாதாரத் துறை தரவுகளின்படி, 

நேர்மறை விகிதம் 5.44 சதவீதமாக உயர்ந்துள்ளது. சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 4,918 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஒருநாளில் 17.784 பரிசோதனைகள் மேற்கொண்டுள்ளது. 

ADVERTISEMENT

பெங்களூருவில் 887 கரோனா வழக்குகளும், அதைத் தொடர்ந்து தட்சிண கன்னடா (21),  உடுப்பி (17), மைசூர் (14) மற்றும் தார்வாட் (10) என தொற்று பதிவாகியுள்ளன.

புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள்

அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவர்கள் 15-க்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா பதிவாகியிருந்தால், அங்குள்ள அனைவரும் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். 

மேலும், கரோனா தொற்று கண்டறியப்பட்டால் பள்ளி அல்லது அடுக்குமாடிக் குடியிருப்பை சீல் வைக்கவேண்டிய அவசியமில்லை. அடுக்குமாடிக் குடியிருப்புகளின் கிளப் ஹவுஸ், நீச்சல் குளம், விளையாட்டு ஆகியவற்றை மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தொற்று அதிகரித்துள்ளதை அடுத்து, பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க மாநில அரசு ஆலோசித்து வருகிறது. 

கரோனா தொடர்பான தொழில்நுட்ப ஆலோசனைக் குழு மாநிலத்தில் ஏற்படக்கூடிய தொற்றுநோய் சூழ்நிலையைக் கட்டப்படுத்த இந்தப் பரிந்துரையை செய்துள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT