இந்தியா

மகாராஷ்டிரத்தில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு: எப்படி நடக்கும்?

29th Jun 2022 04:02 PM

ADVERTISEMENT


புது தில்லி: மகாராஷ்டிர சட்டப்பேரவையில் நாளை, தனது பெரும்பான்மையை நிரூபிக்கமாறு முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு ஆளுநர் பகத் சிங் கோஷியாரி உத்தரவிட்டுள்ளார்.

இதற்காக மகாராஷ்டிர சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் நாளை கூடவிருக்கிறது.

மகா விகாஸ் அகாடி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக 7 சுயேச்சை எம்எல்ஏக்கள் உள்பட சில எம்எல்ஏக்கள் அளித்த கடிதத்தின் அடிப்படையில், உத்தவ் தாக்கரேவை, சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அழைப்பு விடுத்தார்.

நாளை மகாராஷ்டிர சட்டப்பேரவையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பு எப்படி நடத்தப்பட வேண்டும் என்பது குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதன்படி, மகாராஷ்டிர சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் ஜூன் 30ஆம் தேதி 11 மணிக்குத் தொடங்கப்பட வேண்டும்.

முதல்வர் உத்தவ் தாக்கரே, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்காக மட்டும் இந்த கூட்டம் நடைபெறுகிறது.

ஜூன் 30ஆம் தேதி மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட வேண்டும். எந்தக் காரணத்துக்காகவும் இடையில் ஒத்திவைக்கப்படக் கூடாது.

நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, சட்டப்பேரவை உறுப்பினர்களின் வாக்குகளை எண்ணுவதற்கு வசதியாக அவர்கள் எழுந்து நிற்க வேண்டும்.

அனைத்து பேரவை நடவடிக்கைகளும் நேரடியாக ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனைத்து பேரவை நடவடிக்கைகளையும் விடியோ பதிவு செய்ய சட்டச்பேரவை செயலாளர், தேவையான நடவடிக்கைகளை எடுத்து, அந்த விடியோ பதிவை ஆளுநரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

நம்பிக்கை வாக்கெடுப்பு அமைதியான முறையில் நடைபெறும் பேரவை வளாகத்துக்கு வெளியேயும் உள்ளேயும் போதிய பாதுகாப்பு போடப்பட வேண்டும் எனறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


மகாராஷ்டிரத்தில் சிவசேனை-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. அண்மையில், சிவசேனை மூத்த தலைவா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்எல்ஏக்கள், அரசுக்கு எதிராகப் போா்க்கொடி தூக்கியுள்ளனா். அவா்கள், அசாம் மாநிலம், குவாஹாட்டியில் உள்ள விடுதியில் தங்கியுள்ளனா்.

இந்நிலையில், தன்னுடன் பேச்சுாவா்த்தைக்கு வருமாறு குவாஹாட்டியில் முகாமிட்டுள்ள அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு உத்தவ் தாக்கரே நேற்று அழைப்பு விடுத்திருந்தார்.

இப்போதுகூட எதுவும் நடந்துவிடவில்லை. மும்பைக்கு திரும்பி என்னுடன் அமா்ந்து பேசுங்கள். அப்போதுதான் குழப்பத்துக்கு ஏதாவது ஒரு தீா்வு கிடைக்கும். ஒரு கட்சியின் தலைவனாக, குடும்பத்தின் தலைவனாக இன்னும் உங்கள் மீது அக்கறை கொண்டிருக்கிறேன் என்றாா்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, அதிருப்தி எம்எல்ஏக்கள் விரும்பினால் முதல்வா் பதவியை ராஜிநாமா செய்யத் தயாராக இருப்பதாக உத்தவ் தாக்கரே கூறியிருந்தாா்.

விரைவில் திரும்புவேன்-ஏக்நாத் ஷிண்டே:
அசாமில் இருந்து விரைவில் மும்பைக்குத் திரும்ப இருப்பதாக ஏக்நாத் ஷிண்டே கூறினாா்.

குவாஹாட்டியில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
எனக்கு 50 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது. அவா்கள் தாங்களாக முன்வந்து எனக்கு ஆதரவு அளித்துள்ளனா். குவாஹாட்டியில் என்னுடன் தங்கியிருக்கும் சிவசேனை எம்எல்ஏக்களில் 20 போ், தங்களுடன் தொடா்பில் இருப்பதாக சில சிவசேனை மூத்த தலைவா்கள் கூறுகிறாா்கள். அப்படியெனில் அவா்களின் பெயா்களை வெளியிடுங்கள். ஹிந்துத்துவ கொள்கையைப் பின்பற்றி கட்சியின் நிறுவனா் பால் தாக்கரேவின் சிவசேனையை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் என்றாா் அவா்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT