இந்தியா

உதய்பூர் கொலை: 'மனிதாபிமானத்தை சிதைக்கிறது வகுப்புவாதம்'

29th Jun 2022 09:47 PM

ADVERTISEMENT

 

வகுப்புவாதம் மனிதர்களிடையே உள்ள கடைசித் துளி மனிதாபிமானத்தையும் முழுவதுமாக சிதைத்துவிடுவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 

உதய்பூரில் தையல் கடைக்காரர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது மனித மனசாட்சியை உலுக்கும் சம்பவம் எனக் குறிப்பிட்டுள்ளார். 

படிக்க | மகாராஷ்டிரத்தில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு: நீதிமன்றம் அனுமதி

ADVERTISEMENT

ராஜஸ்தானில் உதய்பூரில் தையல்காரா் செவ்வாய்க்கிழமை கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டாா். அவா் கொலை செய்யப்பட்டதை கைப்பேசியில் விடியோ எடுத்து வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

படுகொலையில் தொடர்புடைய கௌஸ் மொஹம்மது மற்றும் ரியாஸ் ஜப்பர் ஆகிய இரண்டு குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்த சம்பவத்துக்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், உதய்பூரில் மதத்தின் தூண்டுதலால் ஒருவரை பயங்கர ஆயுதத்தால் கொடூரமான முறையில் கொலை செய்வது மனித மனசாட்சியை உலுக்கும் செயல்.  வகுப்புவாத பேத அரசியல் மனிதர்களிடம் உள்ள கடைசித் துளி மனிதாபிமானத்தை முழுவதுமாக சிதைத்துவிகிறது எனக் குறிப்பிட்டுள்ளார். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT