இந்தியா

'பாஜகவினருக்கு வேலை கொடுப்பதற்காகவே அக்னிபத் திட்டம்' - மம்தா பானர்ஜி தாக்கு!

DIN

பாஜகவினருக்கு வேலை கொடுப்பதற்காக அக்னிபத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 

4 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் இந்திய ராணுவத்தில் ஆள் சேர்க்கும் மத்திய அரசின் 'அக்னிபத்' திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றன. 

இந்த திட்டதிற்கு ஏற்கெனவே கண்டனம் தெரிவித்துள்ள மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அக்னிபத் ஆட்சேர்ப்புத் திட்டம் தொடர்பாக மத்திய அரசிடமிருந்து ஒரு கடிதம் வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் நேற்று ஒரு கூட்டத்தில் பேசிய மம்தா, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அக்னி வீரர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்று மாநில அரசை மத்திய அரசு வலியுறுத்தும் ஒரு கடிதம் எனக்கு வந்தது. 

பாஜகவினருக்கு வேலை கொடுக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். நாங்கள் ஏன் கொடுக்க வேண்டும்?  எங்கள் மாநில இளைஞர்களுக்குத் தான் முன்னுரிமை கொடுக்க முடியும்' என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

ஜம்மு: கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

SCROLL FOR NEXT