இந்தியா

சிபிஎஸ்இ 10, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஜூலை 4 இல் வெளியாகலாம்: மத்திய கல்வி அமைச்சகம்

29th Jun 2022 11:04 AM

ADVERTISEMENT

 

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்து 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வெழுதியவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூலை 4 ஆம் தேதி வெளியாகும் என்று மத்திய கல்வி அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. 

2021-22 ஆம் கல்வியாண்டுக்கான சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 26-ஆம் தேதி தொடங்கி மே 24 ஆம் தேதி வரை நடைபெற்றது. 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 26 ஆம் தேதி தொடங்கி ஜூன் 15 ஆம் தேதி வரை நடைபெற்றது.

10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை 35 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதினர், அதில் 21 லட்சம் மாணவர்கள் 10 ஆம் வகுப்பு தேர்வெழுதினர், 14 லட்சம் பேர் 12 ஆம் வகுப்பு தேர்வெழுதினர்.

ADVERTISEMENT

10 மற்றும் 12 ஆம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற, மாணவ, மாணவிகள் குறைந்தபட்சம் 30 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

பெரும்பாலான மாநிலங்களில் 12 ஆம் வகுப்பு  வாரியத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு, உயர்கல்வி நிறுவனங்களுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் நலன் கருதி 12 ஆம்  வகுப்பு முடிவுகளை விரைவில் வெளியிட சிபிஎஸ்இ அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதாக தகவல்கள் வெளியானது. 

இந்நிலையில், 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வெழுதியவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூலை 4 ஆம் தேதி  வெளியாகும் என்று மத்திய கல்வி அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அதன்படி, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை ஜூலை 4 ஆம் தேதியும், 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை ஜூலை 10 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று கல்வி அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை cbse.gov.in மற்றும் cbresults.nic.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளத்தின் பதிவு எண், ரோல் எண்ணை உள்ளீடு செய்து தெரிந்துகொள்ளலாம். 

இது தவிர, மாணவர்கள் தங்கள் முடிவுகளை Digilocker செயலி மற்றும் இணையதளத்தில் அதாவது digilocker.gov.in மூலமும் தெரிந்துகொள்ளலாம். 

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு, பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ நுழைவுத் தேர்வு, இளங்கலை படிப்புகளுக்கு பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு ஆகியவற்றில் 12 ஆம் வகுப்பு தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை கணக்கில் கொள்ளப்படாது.  

இருப்பினும், மாநிலத்தின் அதிகார வரம்பிற்குள் வரும் பெரும்பாலான உயர்கல்வி துறைகளில் 12 ஆம் வகுப்புத் தேர்வு மதிப்பெண்கள் போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT