இந்தியா

படுகொலை செய்யப்பட்ட கன்னையா லாலின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

29th Jun 2022 01:35 PM

ADVERTISEMENT

 

உதய்பூரில் படுகொலை செய்யப்பட்ட தையல்காரரான கன்னையா லாலின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

நூற்றுக்கணக்கான உள்ளூர் மக்கள் முன்னிலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் லாலின் இறுதி ஊர்வலம் செக்டர் 14இல் உள்ள அவரது வீட்டில் இருந்து தொடங்கியது.

இஸ்லாத்தை அவமதித்ததற்காக பழிவாங்குவதாகக் கூறி இணையத்தில் விடியோக்களை வெளியிட்ட இருவரால் செவ்வாயன்று லால் கொல்லப்பட்டார்.

ADVERTISEMENT

இந்த சம்பவம் உதய்பூரில் வன்முறை சம்பவங்களைத் தூண்டியது. இதையடுத்து நகரின் ஏழு காவல் நிலைய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மேலும், மாநிலத்தின் 33 மாவட்டங்களிலும் செல்போன் இணையச் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT