இந்தியா

ஆகஸ்ட் 6ஆம் தேதி குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

29th Jun 2022 04:15 PM

ADVERTISEMENT

குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில் அப்பதவிக்கான தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

இதையும் படிக்க | அதிமுக பொதுக்குழு: நத்தம் விஸ்வநாதன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

குடியரசு துணைத் தலைவராக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில் துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பை இந்தியத் தேர்தல் ஆணையம் புதன்கிழமை வெளியிட்டது. 

அதன்படி ஆகஸ்ட் 6ஆம் தேதி குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதையும் படிக்க | மகாராஷ்டிரத்தில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு: எப்படி நடக்கும்?

ஜூலை 5ஆம் தேதி மனுத்தாக்கல் தொடங்கும் எனவும் வேட்பாளர்கள் வேட்புமனுவைத் தாக்கல் செய்ய ஜூலை 19ஆம் தேதி கடைசி நாள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூலை 20ஆம் தேதி வேட்புமனு மீது பரிசீலனை நடைபெறும் எனவும் வேட்புமனுக்களைத் திரும்பப் பெற ஜூலை 22 கடைசி தினம் எனவும் இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

ஆகஸ்ட் 6ஆம் தேதி வாக்குப்பதிவு முடிந்த உடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியக் குடியரசுத் தலைவா் தோ்தல் ஜூலை 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பாக திரெளபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் சார்பாக யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT