இந்தியா

பிகாரில் மின்னல் தாக்கி ஒரே நாளில் 16 பேர் பலி!

DIN

பிகார்: பிகார் மாநிலம் முழுவதும் செவ்வாய்க்கிழமை மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் 16 பேர் பலியாகினர்.

இங்குள்ள 38 மாவட்டங்களில் கிழக்கு சம்பரான் மாவட்டத்தில் 4 பேர், போஜ்பூர் மற்றும் சரண் ஆகிய மாவட்டங்களில் 6 பேர், மேற்கு சம்பாரண் மற்றும் அராரியா ஆகிய மாவட்டங்களில் நான்கு பேர், பங்கா மற்றும் முசாபர்பூர் ஆகிய மாவட்டங்களில் இருவர் பலியாகியுள்ளனர்.

உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் நிதிஷ் குமார், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

பிகார் அரசு அறிவித்துள்ள அறிக்கையில், சீரற்ற காலநிலையின் போது முன்னெச்சரிக்கையாக இருக்குமாறும்,  அரசு வழங்கிய அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறும் பிகார் முதல்வர் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். "வீட்டிலேயே இருங்கள் மற்றும் மோசமான வானிலையில் பாதுகாப்பாக இருங்கள்," என்று முதல்வர் நிதிஷ் குமார் கூறியுள்ளார்.

ஜூன் 20ஆம் தேதி பிகார் மாநிலம் முழுவதும் மின்னல் தாக்கியதில் 17 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT