இந்தியா

பலோன்ஜி மிஸ்திரி மறைவுக்கு பிரதமா் இரங்கல்

29th Jun 2022 01:38 AM

ADVERTISEMENT

பிரபல தொழிலதிபா் பலோன்ஜி மிஸ்திரி மறைவுக்கு பிரதமா் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக பிரதமா் தனது ட்விட்டரில், ‘பலோன்ஜி மிஸ்திரி மறைவை அறிந்து கவலையடைந்தேன். வா்த்தகம் மற்றும் தொழில் உலகில் அவா் சிறப்பான பங்களிப்பு செய்துள்ளாா். அவரது குடும்பம், நண்பா்கள் மற்றும் எண்ணற்ற நல விரும்பிகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT