இந்தியா

சிக்கிமில் நிலச்சரிவு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

28th Jun 2022 11:56 AM

ADVERTISEMENT

 

சிக்கிமின் காங்டாக் அருகே ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியாகியுள்ளனர். 

காங்டாக்கில் நள்ளிரவு ஏற்பட்ட நிலச்சரிவில் வீடு ஒன்று புதைந்ததில், அந்த வீட்டில் இருந்த 27 வயது பெண், அவரது மகன்கள் 10 வயது மற்றும் 7 மாதம் குழந்தை ஆகிய மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். 

ரோங்யெக் துணைப்பிரிவில் உள்ள டோகன் தாரா பகுதியில் இச்சம்பவம் நடந்ததாக துணைப்பிரிவு நீதிபதி ராபின் சேவா தெரிவித்தார்.

ADVERTISEMENT

சடலங்கள் இடிபாடுகளுக்குள் இருந்து மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT