இந்தியா

கரோனா அதிகரிப்பு: மாநிலங்களுடன் மத்திய சுகாதாரத் துறை ஆலோசனை

28th Jun 2022 03:58 PM

ADVERTISEMENT

 

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், மாநில அரசுகளுடன் மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

நாட்டிலுள்ள கரோனா பரவல் மற்றும் தடுப்பூசி பணிகள் குறித்து, கடந்த 23ஆம் தேதி மருத்துவ நிபுணர்களுடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து மாநில அரசுகளுடன் மத்திய சுகாதாரத் துறை செயலர் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

படிக்கநாடு முழுவதும் ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனைக்கு தடை

ADVERTISEMENT

மத்திய அமைச்சர் நடத்திய உயர் மட்ட ஆலோசனையின்போது, நாட்டில் கரோனா பரவலைத் தீவிரமாக கண்காணிக்கவும், முதியவர்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவர்கள் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். 

கடந்த இரு வாரங்களாக நாட்டில் கரோனா பரவல் வழக்கத்திற்கு மாறாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரம், கேரளம், கர்நாடகம், உத்தரப் பிரதேசம், தெலங்கானா, ஹரியாணா, தில்லி, தமிழ்நாடு, மேற்கு வங்கம், குஜராத் ஆகிய மாநிலங்களில் கரோனா பரவல் அதிகமாக உள்ளது.

படிக்க | பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை உறுதி செய்க

மருத்துவமனையில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோரை கண்காணிக்கவும் அறிவுறுத்திய மத்திய அமைச்சர், பயணங்களை முடித்து வருபவர்களுக்கு கட்டாயம் பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டு, கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT