இந்தியா

மும்பை விபத்து: ஏக்நாத் ஷிண்டே தரப்பில் நிவாரணம் அறிவிப்பு!

28th Jun 2022 04:57 PM

ADVERTISEMENT

மும்பை கட்டட விபத்தில் பலியானோருக்கு ரூ. 5 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சமும் நிவாரணம் வழங்கப்படும் என சிவசேனை அதிருப்தி எம்எல்ஏ மங்கேஷ் குண்டல்கர் தெரிவித்துள்ளார். 

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் குர்லா அருகே நாயக் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக் கட்டடம் நள்ளிரவில் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

இந்த விபத்தில் தற்போது பலியானோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. 13 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 

ADVERTISEMENT

இதையும் படிக்க | மும்பை கட்டட விபத்தில் பலி 10 ஆக உயர்வு! தொடரும் மீட்புப்பணி

காயமடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள கட்கோபர் மற்றும் சியான் பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 5 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சமும் நிவாரணம் வழங்கப்படும் என சிவசேனை அதிருப்தி எம்எல்ஏ மங்கேஷ் குண்டல்கர் தெரிவித்துள்ளார். 

சிவசேனை அமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவும் தானும் வழங்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

 

முன்னதாக விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மாநில அரசு சார்பில் ரூ. 5 லட்சம் நிவாரணமும் காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சையும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க | மும்பை கட்டட விபத்து: பலியானோர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்

ADVERTISEMENT
ADVERTISEMENT