இந்தியா

திட்டமிட்டபடி ஜூலை 17ல் நீட் தேர்வு: தேசிய தேர்வு முகமை

28th Jun 2022 12:01 PM

ADVERTISEMENT

நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு திட்டமிட்டபடி வருகிற ஜூலை 17 ஆம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. 

2021 நீட் தோ்வு மதிப்பெண் அடிப்படையிலான இளநிலை மருத்துவப் படிப்பை மாணவா் சோ்க்கை கலந்தாய்வு கடந்த மாா்ச் மாதத்தில் முடிவடைந்தது. இதையடுத்து அடுத்த 3 மாதத்தில், 2022-ஆம் ஆண்டுக்கான நீட் தோ்வு வரும் ஜூலை 17-ஆம் தேதி நடைபெற உள்ளது.

மேலும், பொதுத் தோ்வு, மத்திய பல்கலைக்கழக இளநிலை பட்டப் படிப்புகளுக்கான சியுஇடி தோ்வு, மத்திய உயா் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் இளநிலை தொழில்நுட்ப பட்டப் படிப்புகளுக்கான ஜே.இ.இ. முதல்நிலைத் தோ்வு ஆகிய தோ்வுகள், நீட் தோ்வு நடைபெறும் சமயத்திலேயே அடுத்தடுத்து நடைபெற இருக்கின்றன.

இதனால் நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என மாணவர்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்த நிலையில், நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு திட்டமிட்டபடி வருகிற ஜூலை 17 ஆம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை விளக்கம் தெரிவித்துள்ளது. 

ADVERTISEMENT

மேலும் சியுஇடி, ஜே.இ.இ. முதல்நிலைத் தோ்வுகளும் திட்டமிட்டபடி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சியுஇடி தேர்வு ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 10 வரையிலும் ஜே.இ.இ. தேர்வு ஜூலை 21 முதல் 30 வரையிலும் நடைபெறுகின்றன. 

இதையும் படிக்க | நீட் தோ்வை ஒத்திவைக்க வேண்டும்: தோ்வா்கள் கோரிக்கை

ADVERTISEMENT
ADVERTISEMENT