இந்தியா

தில்லி சென்றார் பட்னாவிஸ்; பாஜக தலைவர்களுடன் முக்கிய ஆலோசனை?

28th Jun 2022 03:34 PM

ADVERTISEMENT

மகாராஷ்டிரத்தில் அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில், பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் தில்லி சென்றுள்ளார். அங்கு பாஜக தலைவர்களுடன் அவர் முக்கிய ஆலோசனையில் ஈடுபட உள்ளதாகத் தெரிகிறது. 

மகாராஷ்டிரத்தில் மகா விகாஸ் கூட்டணி ஆட்சிக்கு எதிராக அமைச்சா் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 37 எம்எல்ஏக்கள் அணி திரண்டுள்ளனா். மேலும் 9 சுயேச்சை எம்எல்ஏக்களும் அவா்களுக்கு ஆதரவாக உள்ளனா். இந்நிலையில், ஷிண்டே உள்ளிட்ட 16 எம்எல்ஏக்களுக்கு தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவா்கள் திங்கள்கிழமை மாலைக்குள் எழுத்துப்பூா்வ பதிலளிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. 

மகாராஷ்டிர பேரவை துணைத் தலைவா் அனுப்பியுள்ள தகுதிநீக்க நோட்டீஸை எதிா்த்து சிவசேனை அதிருப்தி எம்எல்ஏக்கள் குழுவின் தலைவா் ஏக்நாத் ஷிண்டே உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவும் விசாரணையில் இருந்து வருகிறது. 

இந்நிலையில், பாஜக மூத்த தலைவரும் மாநில எதிர்க்கட்சித் தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் இன்று பிற்பகல் தில்லி சென்றுள்ளார். அங்கு பாஜக தலைவர்களுடன் அவர் முக்கிய ஆலோசனையில் ஈடுபட உள்ளதாகத் தெரிகிறது. 

ADVERTISEMENT

மகாராஷ்டிர பேரவையில் கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்துள்ள நிலையில் முதல்வர் உத்தவ் தாக்கரே விரைவில் தனது பதவியை ராஜிநாமா செய்யவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

எனவே அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தேவேந்திர பட்னாவிஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தலாம் என்று தெரிகிறது. 

இதையும் படிக்க | 'எங்கள் கூட்டணி விவகாரத்தில் ஃபட்னாவிஸ் தலையிட்டால்...' - சஞ்சய் ரௌத் எச்சரிக்கை!

ADVERTISEMENT
ADVERTISEMENT