இந்தியா

மக்கள் எச்சரிக்கையாக இருந்தால் நாட்டில் அது நடக்காமல் தவிர்க்கலாம்

28th Jun 2022 09:30 AM

ADVERTISEMENT

இந்தியாவில் புதிதாக 11,793 பேருக்கு கரோனா நோய்த் தொற்று பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 1 லட்சத்தை நோக்கிச் செல்கிறது. மக்கள் எச்சரிக்கையாக இருந்தால் அந்த நிலையை தவிர்க்கலாம் என்று கூறப்படுகிறது.

நாட்டின் கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. புதிதாக 11,793 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 27பேர் நோய்த் தொற்றுக்கு பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 5,25,047 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 10,917 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 4,27,97,092 பேர் குணமடைந்துள்ளனர்.

இதையும் படிக்க.. ரோட்டுக் கடையில் சாப்பிடுகிறவரா நீங்கள்? ஆபத்தை அறிந்துகொள்ள...

ADVERTISEMENT

புதிதாக 11 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று நாடு முழுவதும் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 96,700 ஆக அதிகரித்துள்ளது. மொத்த பாதிப்பில் இது  சதவிகிதம். தேசிய அளவில் குணமடைவோர் விகிதம் 98.57 ஆக உள்ளது. . 

அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, நாட்டில் இதுவரை மொத்தம் 197.31 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT