இந்தியா

'எங்கள் கூட்டணி விவகாரத்தில் ஃபட்னாவிஸ் தலையிட்டால்...' - சஞ்சய் ரௌத் எச்சரிக்கை!

28th Jun 2022 12:35 PM

ADVERTISEMENT

மகா விகாஸ் கூட்டணி விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஈடுபட வேண்டாம் என்றும் ஒருவேளை தலையிட்டால் ஃபட்னாவிஸ், பாஜக மற்றும் பிரதமர் மோடியின் பெயர்கள் களங்கப்படும் என்றும் சிவசேனை எம்.பி. சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார். 

'தேவேந்திர ஃபட்னாவிஸ் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார், அவருக்கு 116 எம்எல்ஏக்கள் உள்ளனர். இது அதிகமான எண்ணிக்கை. உண்மையிலேயே அவரால் சில நல்ல வேலைகளைச் செய்து மாநிலத்தை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும். அவர் அதைச் செய்யக்கூடியவர். அவர் மாநிலத்தின் முதல்வராகவும் இருந்துள்ளார். அவருக்கு தொலைநோக்கு பார்வை உள்ளது. அதனால் இன்று அரசியலில் என்ன நடந்தாலும் அதில் அவர் தலையிடக்கூடாது. ஒரு நண்பர் என்ற முறையில் அவருக்கு என்னுடைய தனிப்பட்ட அறிவுரை. ஒருவேளை அவர் அதில் ஈடுபட்டால் அவருக்கும் அவரது கட்சிக்கும் பிரதமர் மோடியின் பெயருக்கும் களங்கம் ஏற்படும்' என்று கூறியுள்ளார். 

 மேலும் பேசிய அவர், 'அதிருப்தி எம்எல்ஏக்களில் இன்னும் சில பேர் எங்களுடன் தொடர்பில் உள்ளனர். அவர்களின் குடும்பத்தினரும் எங்களுடன் தொடர்பில் உள்ளனர், அவர்கள் மீண்டும் எங்களிடம் திரும்புவார்கள் என்று நம்புகிறோம்' என்று கூறினார். 

இதையும் படிக்க | சிவசேனை அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு: மத்திய அரசு நடவடிக்கை

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT