இந்தியா

பாகிஸ்தானில் போலியோ தடுப்பு முகாம் மீது தாக்குதல்: மூவர் பலி

28th Jun 2022 04:52 PM

ADVERTISEMENT

 

பாகிஸ்தானின் வடக்கு வஜிரிஸ்தான் பழங்குடியினர் மாவட்டத்தில் போலியோ தடுப்பு முகாமின் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்பு வழங்க வந்த 2 போலீசார் உள்பட மூவர் கொல்லப்பட்டனர்.

ஆப்கனின் எல்லையை ஒட்டிய மாவட்டத்தில் 9 பேருக்கு போலியோ தொற்று பதிவாகியதை அடுத்து, வீடு வீடாகச் சென்று போலியோ தடுப்பு ஊசி போடும் பணியில் ஈடுபட்டிருந்த போது, துப்பாக்கி ஏந்திய நபர்கள் முகாம் மீது தாக்குதல் நடத்தியதில், போலியோ தடுப்புப் பணியில் ஈடுபட்ட ஒருவர், 2 போலீசார் உள்பட மூவர் உயிரிழந்தனர். 

இந்த தாக்குதலுக்கு எந்த குழுவும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

ADVERTISEMENT

இந்த சம்பவத்திற்கு கைபர் பக்துன்குவா முதல்வர் மெஹ்மூத் கான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்களை விரைவில் கைது செய்யுமாறு முதல்வர் காவல்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT