இந்தியா

சஞ்சய் ரெளத்துக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்

28th Jun 2022 03:14 PM

ADVERTISEMENT

 

சிவசேனை எம்.பி.சஞ்சய் ரெளத் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அமலாக்கத் துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் அரசு நிலத்தில் உள்ள குடியிருப்புகளை இடித்துவிட்டு மறுகட்டுமானம் செய்வதில் ரூ.1,034 கோடிக்கு நில மோசடி நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இதில் ரூ.83 லட்சம் சஞ்சய் ரெளத்தின் மனைவி வா்ஷா ரெளத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும், அதனை சஞ்சய் ரெளத்தின் உதவியாளா் பிரவீண் ரெளத்தின் மனைவி மாதுரி பிரவீண் ரெளத் அனுப்பி வைத்ததாகவும் தெரிகிறது.

இதையும் படிக்க: அடுத்தகட்ட நடவடிக்கை: ஏக்நாத் ஷிண்டே இன்று முக்கிய ஆலோசனை

ADVERTISEMENT

இதன் காரணமாக, நில மோசடியுடன் தொடா்புடைய சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனைகள் தொடா்பாக விசாரிக்க தெற்கு மும்பையில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜராகுமாறு சஞ்சய் ரெளத்துக்கு நேற்று(திங்கள்கிழமை) சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இருப்பினும், மகாராஷ்டிர அரசியலில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக தன்னால் விசாரணைக்கு வர முடியாது என சஞ்சய் ரௌத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் வருகிற ஜூலை 1 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகக் கூறி இரண்டாவது முறையாக சஞ்சய் ரௌத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT