கரோனா பரவலைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை கடிதம் எழுதியுள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய அரசு வழிகாட்டுதலின்படி மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஒரு சில மாநிலங்களில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. எனினும் பாதிக்கப்படுவோர் விகிதம் 45% அதிகரித்துள்ளது.
படிக்க | கரோனா பரவல்: ஐஐடி ஆகிறதா சென்னை மருத்துவக் கல்லூரி?
இந்நிலையில், கரோனாவைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதியுள்ளார்.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாட்டில் வரும் மாதங்களில் பண்டிகை, திருவிழாக்கள், யாத்திரை நடைபெறவுள்ளது.
மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் திருவிழாக்களிலும் சமூக இடைவெளி பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
படிக்க | தமிழ்நாடு கரோனா: இன்றும் அதிகரிப்பு!
மருத்துவ கட்டமைப்பு வசதி, ஆக்சிஜன் இருப்பு, படுக்கை வசதிகள் குறித்து மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மருத்துவமனைகளைச் சுற்றிலும் கரோனா பரவல் அதிகரிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
கரோனா வைரஸ் தொற்று விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவது, தடுப்பூசி செலுத்துவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.