இந்தியா

பாட்னா சிறையில் 37 கைதிகளுக்கு கரோனா

28th Jun 2022 04:13 PM

ADVERTISEMENT

 

பாட்னாவின் பியூர் சிறையில் உள்ள 37 கைதிகளுக்கு செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

இதுகுறித்து சிறை அதிகாரி கூறுகையில், 

கைதிகளுக்கு கடந்த 24 மணி நேரத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. 

ADVERTISEMENT

இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் வளாகத்திற்குள் தனிமைப்படுத்தப்பட்டு, சுகாதார செயல்முறையைத் தொடங்கியது. 

சிறைக்கு வெளியேயும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கைதிகளை சந்திக்க சிறைக்கு வருபவர்களை சிறை நிர்வாகம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. 

பீயூர் சிறையைத் தவிர, திங்களன்று பாட்னாவில் 80 பேருக்கு கரோனா தொற்று பதிவானது. கடந்த ஒரு வாரத்தில் பாட்னாவில் 531 வழக்குகள் காணப்பட்டன மற்றும் தொற்று விகிதம் 0.5 சதவீதத்திலிருந்து 1.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. 

பாட்னாவைத் தவிர கயாவில் 11 பேருக்கும், பாகல்பூரில் 9 பேருக்கும், அர்வால், பாங்கா, சமஸ்திபூரில் தலா 4 பேருக்கும், ரோஹ்தாஸ் மற்றும் சஹர்சாவில் தலா மூவருக்கும், கதிஹார் மற்றும் முங்கரில் தலா 2 பேருக்கும், ஔரங்காபாத், போஜ்பூர், கிழக்கு சம்பாரண், கோபால் கஞ்ச், மாதேபுரா ஆகிய இடங்களில் தலா ஒருவருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT