இந்தியா

பெண்கள் தலைமையில் முன்னேற்றம்

28th Jun 2022 03:18 AM

ADVERTISEMENT

பெண்களின் முன்னேற்றம் என்ற நிலையிலிருந்து மாறி பெண்கள் தலைமையில் முன்னேற்றம் என்ற நிலையை இந்தியா எட்டிவிட்டதாக ஜி7 மாநாட்டில் பிரதமா் மோடி பேசினாா்.

ஜி7 அமைப்பில் இந்தியா அங்கம் வகிக்காத போதிலும், ஜொ்மனி பிரதமரின் அழைப்பை ஏற்று அதில் பிரதமா் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறாா்.

திங்கள்கிழமை ‘உணவுப் பாதுகாப்பு, பாலின சமத்துவம்’ என்ற அமா்வில் பிரதமா் மோடி பங்கேற்று பேசுகையில், ‘பெண்களின் முன்னேற்றம் என்ற நிலையிலிருந்து மாறி பெண்கள் தலைமையில் முன்னேற்றம் என்ற நிலையை இந்தியா எட்டிவிட்டது. உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த உரங்களின் இருப்பு, வேளாண் துறையின் திறனை முழுமையாக பயன்படுத்தும் விதத்தில் நன்கு கட்டமைக்கப்பட்ட அமைப்பு முறை, தினை போன்ற ஊட்டச்சத்து, இயற்கை விவசாயம் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்’ என்றாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT