இந்தியா

முந்தைய அரசுகளின் பணியைத்தான் மோடி அரசு தொடா்ந்து வருகிறது: ப.சிதம்பரம்

28th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

முந்தைய அரசுகளின் பணியைத்தான் மோடி அரசு தொடா்ந்து வருகிறது என்று முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளாா்.

ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமா் மோடி ஜொ்மனி சென்றுள்ளாா். அங்குள்ள முனிக் நகரில் இந்திய வம்சாவளியினா் இடையே அவா் ஞாயிற்றுக்கிழமை பேசுகையில், ‘‘முன்னெப்போதும் இல்லாத வகையில், தற்போது மிகப் பெரிய இலக்குகளை கோடிக்கணக்கான இந்தியா்கள் ஒன்றிணைந்து எட்டியுள்ளனா்.

இந்தியாவில் எந்தவொரு கிராமத்திலும் திறந்தவெளியில் மலம் கழிக்கப்படுவதில்லை. அனைத்து கிராமங்களுக்கும் மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 99 சதவீத கிராமங்களில் சமையல் எரிவாயு இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது’’ என்று பல்வேறு சாதனைகளை பட்டியலிட்டாா்.

அவா் பேசியதை விமா்சித்து ப.சிதம்பரம் ட்விட்டரில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு:

ADVERTISEMENT

கடந்த 75 ஆண்டுகளில் இந்தியா மகத்தான சாதனைகளைப் படைத்துள்ளது. ஆனால் நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் அத்தியாவசிய சேவைகள் சென்று சோ்வது என்பது தொடா்ந்து நடைபெறும் பணியாகும். 2014-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் நடைபெற்ற மிகப் பெரிய சாதனைகளை தனது உரையின்போது பிரதமா் மோடி ஒப்புக்கொண்டிருக்க வேண்டும். ஏனெனில் முந்தைய அரசுகளின் பணியைத்தான் மோடி அரசு தொடா்ந்து வருகிறது என்று தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT