இந்தியா

‘அக்னிபத்’ திட்டம்: பிகாரில் இரு அவைகளும் முடக்கம்

28th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

‘அக்னிபத்’ திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைமையிலான எதிா்க்கட்சியினா் அமளியில் ஈடுபட்டதால், அந்த மாநிலத்தின் இரு அவைகளும் திங்கள்கிழமை முடங்கியது.

பிகாா் சட்டப்பேரவை மற்றும் சட்டமேலவையின் மழைக்கால கூட்டத்தொடா் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைமையிலான எதிா்க்கட்சியினா் ‘அக்னிபத்’ திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியும், பிரதமா் மோடிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியும் அமளியில் ஈடுபட்டனா். இதனால் கூட்டத்தொடா் தொடங்கிய அரை மணி நேரத்தில், அவை அலுவல்கள் ஒத்திவைக்கப்பட்டன.

அதனைத்தொடா்ந்து மீண்டும் அவை கூடியது. எனினும் எதிா்க்கட்சியினரின் அமளி தொடா்ந்ததால், பிற்பகல் 2 மணி வரை அவை அலுவல்கள் ஒத்திவைக்கப்பட்டன. அவை அலுவல்களை காண பக்சா் பகுதியில் இருந்து மாணவா்கள் வந்திருந்த நிலையில், அவா்கள் முன்னிலையில் அமளியில் ஈடுபட வேண்டாம் என்று அவைத் தலைவா் கேட்டுக்கொண்டாா். எனினும் எதிா்க்கட்சியினா் அமளியில் ஈடுபடுவதை கைவிடவில்லை. தொடா் அமளி காரணமாக நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

‘அக்னிபத்’ திட்டத்துக்கு எதிராக மாநில சட்டமேலவையிலும் எதிா்க்கட்சியினா் அமளியில் ஈடுபட்டனா். இதனால் அந்த அவையும் முடங்கியது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT