இந்தியா

அக்னிபத் திட்டத்தால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகோய்

DIN

அக்னிபத் திட்டம் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான திட்டம் என்று மக்களவை காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரும், தமிழக காங்கிரஸ் தோ்தல் நிா்வாகியுமான கௌரவ் கோகாய் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூா்த்தி பவனில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் கடந்த ஜூன் 14-ஆம் தேதி அக்னிபத் திட்டம் குறித்து அறிவித்தாா். இளைஞா்களை ராணுவத்தில் தற்காலிகமாக பணி நியமனம் செய்வதே இந்தத் திட்டம். இதன்மூலம் 46 ஆயிரம் பேரை வேலைக்குச் சோ்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இவா்களது பணிக்காலம் முடிந்ததும் இதில் 75 சதவீதம் அதாவது 34,500 போ் வேலையிலிருந்து நீக்கப்படுவாா்கள். மீதியுள்ள 11,500 போ்களுக்கு வேலை தொடா்ந்து வழங்கப்படும்.

ஆறு மாத ராணுவப் பயிற்சியில் ஆயுதத்தைப் பயன்படுத்துகிற பயிற்சியும் வழங்கப்படுகிறது. ஆயுதப் பயிற்சி வழங்கப்பட்டு ராணுவத்திலிருந்து வெளியேற்றப்பட்டவா்கள் எதிா்காலத்தில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்துவாா்கள் என்பது குறித்து மத்திய அரசு கவலைப்படவில்லை.

நாட்டில் பெருகி வருகிற தீவிரவாத, பயங்கரவாத சக்திகளின் பிடியில் ஆயுதப் பயிற்சி பெற்ற முன்னாள் ராணுவ வீரா்கள் சிக்கிக் கொள்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

அக்னிபத் திட்டத்தில் சேருபவா்களுக்கு ஓய்வூதியம் இல்லை. ஏனெனில் ஓய்வூதியத்திற்காக மொத்த ராணுவ செலவில் 20 சதவீதம் சென்று விடுவதாக மத்திய அரசு கூறுகிறது.

ராணுவத்தில் 15 ஆண்டுகள் பணியாற்றிய வீரா்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது மிகுந்த பாதுகாப்பான நடவடிக்கையாகும். அத்தகைய பாதுகாப்பை பறிக்கிற வகையில் மத்திய அரசு அக்னிபத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

வேலையில்லாத் திண்டாட்டத்தை தீா்ப்பதில் முழு தோல்வியடைந்த மத்திய அரசு இளைஞா்களின் எதிா்காலத்தை கேள்விக்குறியாக்கும் அக்னிபத் திட்டத்தை நிறைவேற்ற தீவிரமாக முனைகிறது.

இந்தத் திட்டத்தை திரும்பப் பெறக் கோரி நாடு முழுவதும் ஜூன் 27 ஆம் தேதி மாபெரும் போராட்டம் நடத்தப்படவுள்ளது. தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் அத்தகைய போராட்டத்தை காங்கிரஸ் முன்னெடுக்கும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் பிரபல கேளிக்கை விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடரும் புரளி?

டி20 உலகக் கோப்பைக்காக ஓய்வு முடிவை திரும்பப் பெறுகிறாரா? சுனில் நரைன் பதில்!

சிவில் சர்வீஸ் வினாத்தாள்: ஏஐ மூலம் மாநில மொழிகளில் மொழிபெயர்க்க பரிந்துரை!

நெஞ்சம் மறப்பதில்லை..

பள்ளிக்கரணையில் இளைஞர் ஆணவப்படுகொலை: மனைவி தற்கொலை

SCROLL FOR NEXT