இந்தியா

யஷ்வந்த் சின்ஹவுக்கு தெலங்கானா ராஷ்டிர சமிதி ஆதரவு

27th Jun 2022 02:04 PM

ADVERTISEMENT


புது தில்லி: குடியரசுத் தலைவா் தோ்தலில் எதிா்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹவுக்கு தெலங்கானா ராஷ்டிர சமிதி ஆதரவு தெரிவித்துள்ளது.

காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 17 கட்சிகள் இணைந்து பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹவை நிறுத்தியுள்ளனர்.

புது தில்லியில் இன்று தேர்தல் அதிகாரியான மாநிலங்களவை செயலரிடம், யஷ்வந்த் சின்ஹா இன்று காலை தனது வேட்புமனுவை அளித்தார்.

வேட்புமனு தாக்கலின்போது காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா், சமாஜ்வாதி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ், தேசிய மாநாடு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா உள்ளிட்டோா் உடனிருந்தனர்.

ADVERTISEMENT

இதையும் படிக்க.. குடியரசுத் தலைவா் தோ்தல்: எதிா்க்கட்சிகளின் கணக்கு

ஆம் ஆத்மி, தெலங்கானா ராஷ்டிர சமிதி உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தங்களது ஆதரவு யாருக்கென்று அறிவிக்காமல் இருந்த நிலையில், தெலங்கானா ராஷ்டிர சமிதி, யஷ்வந்த் சின்ஹவுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் மூத்த தலைவர் கே.டி. ராமா ராவ் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில்,

“தெலங்கானா ராஷ்டிர சமிதி தலைவர் சந்திரசேகர் ராவ், குடியரசுத் தலைவர் தேர்தலில் யஷ்வந்த் சின்ஹவுக்கு ஆதரவளிப்பதாக முடிவெடுத்துள்ளார். தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியை சேர்ந்த எம்.பி.க்களுடன் இன்றைய வேட்புமனுத் தாக்கல் நிகழ்வில் பங்கேற்கவுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவா் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக பழங்குடியினத்தைச் சோ்ந்த திரெளபதி முா்மு அறிவிக்கப்பட்டு, கடந்த வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT