இந்தியா

‘இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையேயான போராட்டம்’: ராகுல் காந்தி

27th Jun 2022 02:21 PM

ADVERTISEMENT


புது தில்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையிலான போராட்டம் நடைபெறுவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 17 கட்சிகள் இணைந்து பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹவை நிறுத்தியுள்ளனர்.

புது தில்லியில் இன்று தேர்தல் அதிகாரியான மாநிலங்களவை செயலரிடம், யஷ்வந்த் சின்ஹா இன்று காலை தனது வேட்புமனுவை அளித்தார்.

வேட்புமனு தாக்கலின்போது காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா், சமாஜ்வாதி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ், தேசிய மாநாடு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா உள்ளிட்டோா் உடனிருந்தனர்.

ADVERTISEMENT

இதையும் படிக்க | மகாராஷ்டிர அரசுக்கான ஆதரவு வாபஸ்: அதிருப்தி எம்எல்ஏக்கள்

அப்போது ராகுல் காந்தி கூறியதாவது:

அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து யஷ்வந்த் சின்ஹவை ஆதரித்துள்ளனர். தனி நபரை ஆதரிக்கிறோம் என்றாலும், இது இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையேயான போராட்டம். ஆர்.எஸ்.எஸின் கோபம் மற்றும் வெறுப்பு சித்தாந்தத்திற்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளின் இரக்க சித்தாந்தம் ஒன்றாக நிற்கிறது.”

குடியரசுத் தலைவா் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக பழங்குடியினத்தைச் சோ்ந்த திரெளபதி முா்மு அறிவிக்கப்பட்டு, கடந்த வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT