இந்தியா

பைடன், ட்ரூடோ, மேக்ரானுடன் பிரதமர் மோடி!

27th Jun 2022 09:55 PM

ADVERTISEMENT


ஜி7 உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் ஆகியோரை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (திங்கள்கிழமை) சந்தித்தார்.

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், கனடா, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி7 அமைப்பின் மாநாடு ஜெர்மனியில் நேற்றும் இன்றும் நடைபெற்றது.

இதையும் படிக்க4-ஆவது தொழில் புரட்சியில் இந்தியா பின்தங்காது: நரேந்திர மோடி

இதில் பங்கேற்பதற்காக ஞாயிற்றுக்கிழமை ஜெர்மனி சென்ற பிரதமர் நரேந்திர மோடியை அந்த நாட்டுப் பிரதமர் ஒலாஃப் ஷோல்ஸ் வரவேற்றார். ஞாயிற்றுக்கிழமை ஆர்ஜென்டீனா அதிபர் அல்பெர்டோ ஃபெர்னான்டஸைச் சந்தித்துப் பேசினார் பிரதமர் மோடி. இருநாட்டுத் தலைவர்களுக்கிடையே நிகழ்ந்த முதல் சந்திப்பு இது.

ADVERTISEMENT

இதையடுத்து, திங்கள்கிழமை உச்சி மாநாடு தொடங்குவதற்கு முன்பு தலைவர்கள் புகைப்படம் எடுக்கக் கூடினர். அப்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் பிரான்ஸ் அதிபர் எமானுவல் மேக்ரான் ஆகியோரைச் சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி. சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பெரிதளவில் பகிரப்பட்டு வருகின்றன.

பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரானுடன் பிரதமர் மோடி
Tags : pm modi
ADVERTISEMENT
ADVERTISEMENT