இந்தியா

அசாமுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பிய மணிப்பூர்

27th Jun 2022 04:24 PM

ADVERTISEMENT

 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாம் மக்களுக்கு மணிப்பூர் முதல்வர் என்.பைரன் சிங் நிவாரணப் பொருட்களை இன்று அனுப்பி வைத்தார். 

மாநில தலைநகர் இம்பாலில் உள்ள காங்லா கேட்டில் இருந்து நிவாரணப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை அவர் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.

நிவாரணப் பொருட்களில் 135 குவிண்டால் அரிசி, 102 மூட்டை பருப்பு, 120 மூட்டை உப்பு, 120 பாக்ஸ் கடுகு எண்ணெய் உள்ளிட்ட சுமார் ரூ.1 கோடி மதிப்பிலானவை என்று சிங் கூறினார். 

ADVERTISEMENT

மேலும், அசாம் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளுக்காக எஸ்டிஆர்எப்.யின்  40 பணியாளர்களும் அனுப்பப்பட்டுள்ளனர். 

மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) அமைச்சர் கூறும்போது, அண்டை மாநிலமான அசாமில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஏராளமான சொத்துக்கள் மற்றும் உயிர்கள் பலியானது வருத்தமளிக்கிறது. மேலும் உதவிகளை அனுப்பவும் நாங்கள் ஆலோசித்து வருகிறோம் என்று அவர் கூறினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT