இந்தியா

நாட்டில் இதுவரை 197.11 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டன: சுகாதாரத்துறை

27th Jun 2022 01:10 PM

ADVERTISEMENT


நாட்டில் இதுவரை 197.11 கோடி கரோனா தடுப்பூசிகள் டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை திங்கள்கிழமை வெளியிட்டுள்ள தரவுகளின்படி,

நாட்டில் இதுவரை மொத்தம் 1,97,11,91,329 (197.11 கோடி) தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது. 

12-14 வயதிற்குள்பட்ட இளம் பருவத்தினருக்கு கரோனா தடுப்பூசி மார்ச் 16 இல் தொடங்கப்பட்டது. இதுவரை, சுமார் 3,63,25,473-க்கும் அதிகமான முதல்கட்ட தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது. மேலும் 2,26,05,533 பேர் இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தியுள்ளன. 

ADVERTISEMENT

18-44 வயதினருக்கு கடந்த ஏப்ரல் 10-ம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. முதல் டோஸ் 55,81,18,357 ஆகவும், இரண்டாவது டோஸ் 50,02,44,468 பேருக்கும், முன்னெச்சரிக்கையாக 25,77,906 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

மேலும், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17,073 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்  15,208 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை (பெருந்தொற்றின் தொடக்கத்திலிருந்து) 4,27,87,606 ஆக உள்ளது.

நாட்டில் தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 94,420 ஆகக் குறைந்துள்ளது, இது நாட்டின் மொத்த தொற்று பாதிப்பில்  0.19 சதவிகிதம் ஆகும். குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.58 சதவிகிதமாக உள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 3,03,604 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் (86,10,15,683) 86.10 கோடி கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. 

ADVERTISEMENT
ADVERTISEMENT