இந்தியா

‘அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக மாட்டேன்’: சஞ்சய் ரெளத்

DIN

அமலாக்கத்துறையின் விசாரணைக்கு நாளை ஆஜராகப் போவதில்லை என்று சிவசேனை எம்.பி. சஞ்சய் ரெளத் தெரிவித்துள்ளார்.

நிலமோசடி வழக்கில் ஜூன் 28ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக சிவசேனை எம்.பி. சஞ்சய் ரெளத்திற்கு மத்திய அமலாக்கத்துறை இன்று சம்மன் அனுப்பியுள்ளது.

இதுகுறித்து சஞ்சய் ரெளத் பேசியவாதது:

“அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை அறிந்தேன். நான் மண்டியிட மாட்டேன். அதிருப்தி எம்எல்ஏக்கள் என்ன செய்தாலும் நான் குவாத்தி செல்லமாட்டேன். நான் எனது கட்சியுடன் தான் இருப்பேன். நான் நாளை அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக மாட்டேன். அமாலாக்கத்துறையில் ஆஜராக காலவகாசம் கோருவேன். ஆனால், நிச்சயமாக விசாரணையை எதிர்கொள்வேன்” எனத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரத்தில் ஆளும் கூட்டணியின் சிவசேனை கட்சியை சேர்ந்த ஏக்நாத் சிண்டே உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 5 மணி நிலவரம்: 63.20% வாக்குகள் பதிவு!

வாக்களித்த திரைப் பிரபலங்கள் - புகைப்படங்கள்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தங்கும் விடுதிகளில் போலீஸாா் சோதனை

வடகிழக்கு மாநிலங்களில் விறுவிறு வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT