இந்தியா

குடியரசுத் தலைவா் இன்று பிருந்தாவனம் பயணம்

27th Jun 2022 01:00 AM

ADVERTISEMENT

குடியரசுத் தலைவா் திங்கள்கிழமை உத்தர பிரதேசத்தில் அமைந்துள்ள பிருந்தாவனத்துக்குப் பயணம் மேற்கொள்கிறாா்.

இது தொடா்பாக குடியரசுத் தலைவா் மாளிகை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் திங்கள்கிழமை (ஜூன் 27) உத்தர பிரதேச மாநிலம், பிருந்தாவனத்துக்குப் பயணம் மேற்கொள்கிறாா். அவா் கிருஷ்ணா குடில் மக்களைச் சந்தித்து, அவா்களுடன் உரையாடுவாா்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT